மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்....




இந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்....ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை...அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை...மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை... இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்... இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன வென்றால்... பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள்....என்ற கருத்தாக்கம் மட்டுமே....

அடிப்படையில் பல்வேறு இனக்குழுக்களின் நம்பிக்கைகளின் தொகுப்பாகத்தான் இந்து மதம் திகழ்கிறது...எனவே முதலில் இந்து மதத்தை மதங்கள் பட்டியலில் சேர்ப்பதே தவறு...இந்து மதம் என்ற கற்பிதம் பார்ப்பனர்களின் பொருளாதார, சமூக மதிப்பீடுகளுக்கு ஆணிவேராக திகழ்கிறது....எனவே தான் எந்த சாதியைக் காட்டிலும் பார்ப்பனர்களில்தான் நாத்திக,இடதுசாரி சிந்தனைகள் குறைவாக உள்ளது
மேலும் மற்றவர்களை காட்டிலும் பார்ப்பனர்களே இந்து மதம் என்ற கற்பிதத்தை தூக்கி நிறுத்துவதில் முதன்மையானவராக திகழ்கின்றனர்.....

எனவே மதம் என்ற அடிப்படைவாதம் மூலமாக அரசியல் ,சமூக மதிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளை கண்டடைய பார்ப்பனர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்...

எனவே மதம் என்ற ஒரே ஒரு அடிப்படைவாதத்தை வைத்துக் கொண்டு மக்களை
மதம் என்ற போதையில் ஆழ்த்தி, ஒட்டு மொத்த சமூகத்தின் நல்லிணக்கத்தை பிரித்து அதன் மூலம் அரசியல் லாபம், பார்ப்பன உயர்வு, மனு நீதி தர்மம் போன்றவற்றை அடைய எண்ணும் RSS ,VHP போன்ற அமைப்புக்கள் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தேவை இல்லை என்பது என் கருத்து....

No comments: